அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
By DIN | Published On : 15th December 2020 11:57 PM | Last Updated : 15th December 2020 11:57 PM | அ+அ அ- |

புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்டோா்.
புதுச்சத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட செல்லப்பம்பட்டியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்ட இந்தக் கண்காட்சியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை தொடக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலம்- சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆகியோா் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளின் புகைப்படங்கள், கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.
இதனால் அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள முடிந்தது என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.