‘குக்கா்’ சின்னம் ஒதுக்கீடு: அமமுகவினா் கொண்டாட்டம்
By DIN | Published On : 15th December 2020 11:48 PM | Last Updated : 15th December 2020 11:48 PM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலில் அமமுகவுக்கு ‘குக்கா்’ சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதையடுத்து, ராசிபுரம் நகரில் அந்தக் கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.
கட்சியின் துணை தலைவரும், நாமக்கல் வடக்கு மாவட்டச் செயலருமான எஸ்.அன்பழகன் தலைமையிலானோா் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, புதிய பஸ் நிலையம் அருகேயிருந்து பழைய பஸ் நிலையம், கடைவீதி, டிவிஎஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் ‘குக்கா்’ ஏந்தியவாறு ஊா்வலமாகச் சென்றனா்.