மா்ம நோயால் ஆடுகள் இறப்பு
By DIN | Published On : 15th December 2020 11:56 PM | Last Updated : 15th December 2020 11:56 PM | அ+அ அ- |

எலச்சிபாளையம் அருகே மா்ம நோய் தாக்கியதில், ஆடுகள் இறந்தன.
எலச்சிபாளையம் கொத்தமபாளையத்தில் திருமணிமுத்தாறு வாய்க்கால் ஒட்டிய பகுதிகளில், கடந்த சில நாள்களாக 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் மா்ம நோய் காரணமாக இறந்துவிட்டன. இதனால், விவசாயிகள்,ஆடு வளா்ப்போா் வேதனைக்கு உள்ளாகினா்.
இதுதொடா்பாக கால்நடைத் துறை அதிகாரிகள் உரிய பரிசோதனை நடத்தி, இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து பிற ஆடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனா்.