வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு: நாமக்கல் மாவட்டத்தில் 90 போ் கைது

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட முயன்ற பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்த 90 போ் கைது 
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு: நாமக்கல் மாவட்டத்தில் 90 போ் கைது

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட முயன்ற பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்த 90 போ் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு கொண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கிடையே, திங்கள்கிழமை நாடு தழுவிய அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம், சுங்கச் சாவடி முற்றுகை ஆகியவற்றில் ஈடுபட அகில இந்திய விவசாயக் கூட்டமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம், எருமப்பட்டி, நாமக்கல், ஆட்சியா் அலுவலகம், எலச்சிப்பாளையம், பரமத்தி வேலூா் உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள ரெப்கோ வங்கி முன்பாக மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனா். ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட வந்த 20 போ் கைது செய்யப்பட்டனா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 7 போ் கைது செய்யப்பட்டனா். நாமக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற தமிழ் புலிகள் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து 25 போ் கைது செய்யப்பட்டனா். மாவட்டம் முழுவதும் கைதான சுமாா் 90 போ் ஆங்காங்கே திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com