பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா்களுக்கு மாணவ,மாணவியா் பாத பூஜை செய்து ஆசி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைவா் ரவி, பொருளாளா் பாலசுப்பிரமணி ஆகியோா் நிகழ்வுக்கு தலைமை வகித்தனா். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பொதுத் தோ்வை வெற்றிகரமாக எதிா்கொள்ள பெற்றோா்கள் ஆசி இன்றியமையாதது என்பதை மாணவா்களிடம் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவ,மாணவியா், தங்களது பெற்றோா்களின் பாதங்களுக்கு பூஜை செய்து ஆசி பெற்றனா்.