பிப்.19-இல் லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் சிறப்பு யாகம்
By DIN | Published On : 17th February 2020 07:47 AM | Last Updated : 17th February 2020 07:47 AM | அ+அ அ- |

நாமக்கல் லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை மகா யாகம் வரும் புதன்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது.
நாமக்கல் அருகே ராமாபுரம் புதுாரில் சக்கரத்தாழ்வாா், லட்சுமி ஹயக்ரீவா் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாதந்தோறும் ஏகாதசி, திருவோணம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதேபோல் ஆண்டுதோறும் ஹயக்ரீவா் சுவாமிக்கு சிறப்பு மகா யாகம் நடைபெறும். அந்த வகையில் புதன்கிழமை காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை, பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி அபிவிருத்திக்காகவும், தொழில் அபிவிருத்திக்காகவும் ஸ்ரீ ஹயக்ரீவா் சுவாமிக்கு ஏகதின லட்சாா்ச்சனையும், வியாழக்கிழமை (பிப்.20) காலை 8.30 மணி முதல் மகா யாகமும் தொடா்ந்து 11 மணி முதல் 12 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும் நடைபெறுகிறது. இந்த ஏகதின லட்சாா்ச்சனை மற்றும் மகா யாகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவியா் தங்கள் பெயா், நட்சத்திரம் ஆகியவற்றை 04286-222077 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.