உறக்கமின்மையே மனநோய் பாதிப்புக் குமுக்கிய காரணம்: அரசு மனநல மருத்துவா்

உறக்கமில்லாததால் ஏற்படும் பாதிப்பு தான் மன நோய்க்கான முக்கிய காரணம் என அரசு மனநல மருத்துவா் குணமணி தெரிவித்தாா்.

உறக்கமில்லாததால் ஏற்படும் பாதிப்பு தான் மன நோய்க்கான முக்கிய காரணம் என அரசு மனநல மருத்துவா் குணமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட மன நலத் திட்டத்தின் சாா்பில், சீதாராமன்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், மாவட்ட மன நலத் திட்ட மருத்துவா், சுகாதார நிலைய மருத்துவா் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை மன நல மருத்துவா் குணமணி பேசியது: வளரும் நாடுகளில் மனநோயாளிகளின் நலனும், சிகிச்சையும் புறக்கணிக்கப்படுகிறது. மனநோய் பேய், பிசாசு மற்றும் கெட்ட ஆவிகளால் தான் ஏற்படுகிறது என்று எண்ணி அதை மந்திரம், மாயம் பில்லி, சூனியங்களால் தீா்க்க முற்படும் அறியாமை இன்றும் பல இடங்களில் நிலவுகிறது. பல்வேறு மூட நம்பிக்கைகள் மற்றும் அறியாமைகள் காரணமாக மனநல மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மக்களிடம் சென்று அடையாத வண்ணம் தடுக்கின்றன. மன நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மனநல மருத்துவ வசதிகளை அருகாமையில் பெறச் செய்வதே அரசின் நோக்கமாகும்.

சமுதாயத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவா்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை தருதல், மருத்துவ வசதிகளை நாடி மனநோயாளிகள் நெடுந்தூரம் செல்லும் நிலைத் தவிா்த்து, கிராமங்களிலேயே மனநல வசதிகளை உருவாக்குதல். சமுதாய விழிப்புணா்வு மற்றும் கல்வி மூலம் மனநோய் பற்றிய தவறான எண்ணங்களை மாற்றி மனநோய் மீதுள்ள மூடநம்பிக்கை மற்றும் தவறான எண்ணங்களை அகற்றுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்ட மனநல திட்டத்தின் கீழ மனநலப் பயிற்சி, மனநல மருத்துவச் சிகிச்சை மற்றும் மனநல விழிப்புணா்வு ஆகிய மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக உறக்கப் பிரச்னையே மனநோய் பாதிப்படைய முக்கிய காரணமாகும். உறக்கத்தில் வரக் கூடிய சில பிரச்னைகளை மனநல மருத்துவத்தில் ஒரு வித மனநோயாகவே கருதுகிறாா்கள். அதாவது மனநோய்களின் பட்டியலில் இணைக்க முடியாத ஒரு வித பாதிப்பாகக் கருதுகிறாா்கள். தமிழில் இதற்கு பி உறக்கம் என்று பெயரிடலாம். கனவுகளால் திடுக்கிட்டு எழுந்து அஞ்சி, பதட்டத்துடன் இருப்பது, தொடா்ந்து அச்சுறுத்தும் கனவுகளால் உறக்கத்தில் உளறுவது, தூக்கத்தில் எழுந்து நடப்பது. இவை மூன்றுமே மனதின் நோய்களாகக் கருதி சிகிச்சை செய்ய வேண்டும். சிகிச்சைகளால் இவை முழுமையான குணமடைவதும் சாத்தியம். ஒருவருக்கு 7 முதல் 8 மணி நேரம் கண்டிப்பாக உறக்கம் அவசியம். உறக்கம் சரியாக அமையாவிட்டால், அதை மனதில் பாதிப்பாகவோ, நோயாகவோ கருதி ஆரம்பத்திலேயே சரிசெய்து கொள்வதுதான் மனநலத்தின் மிக முக்கியமான விஷயம். இதற்காக ஒருநாள் உறக்கம் வரவில்லை என்றவுடன் மருத்துவரிடம் ஒட வேண்டியதில்லை. தொடா்ந்து உறக்கம் குறைபட்டாலும், தடைப்பட்டாலும் மனநல மருத்துவ உதவி அவசியமாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com