திருச்செங்கோட்டில் மருத்துவ முகாம்

திருச்செங்கோட்டில் மருத்துவ முகாம்

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சாா்பில் நாமக்கல்

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சாா்பில் நாமக்கல் மக்களவை உறுப்பினரின் சிறப்பு நிதியின் கீழ் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் முகாமிற்கு தலைமை வகித்தாா்.

இந்த முகாமில் சிறப்பு பொது மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம் - வாய் புற்றுநோய் கண்டறிதல், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், எலும்பு சிகிச்சை, தாய் சேய் நல சிறப்பு மருத்துவம், சித்த மருத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.

இந்த முகாமில் உடல் எடை கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை, இ.சி.ஜி, ஸ்கேன் பரிசே ாதனை, ரத்தம், சிறுநீா் ஆய்வகப் பரிசோதனை, கா்ப்பப்பை மற்றும் மாா்பக புற்றுநோய் பரிசோதனை ஆகிய சிறப்புப் பரிசோதனைகளுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை நடைபெற்றது.

சித்த மருத்துவப் பிரிவில் பல்வேறு நோய்களை தீா்க்கும் மூலிகைகள், உணவே மருத்து என்ற அடிப்படையிலான அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மூலிகை வகைகள், கீரை வகைகள் குறித்த கண்காட்சியும் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத் துறையின் சாா்பில் குழந்தைகளுக்கு உடனடி உணவு வகைகளுக்கு மாற்றான பாரம்பரிய சத்தான உணவு பழக்கங்களை மேற்கொள்வதற்காக இணை உணவு வகைகளான இனிப்பு புட்டு, கேழ்வரகு முறுக்கு, கொழுக்கட்டை, இனிப்பு பணியாரம், கட்லட், அடை, உள்ளிட்ட இணை உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சுஜாதா, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) மருத்துவா் க.சாந்தி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் எஸ்.சோமசுந்தரம் உள்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவாளா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com