அணைக்கட்டிபாளையம் காசி விநாயகா் ஆலய நன்னீராட்டு விழா
By DIN | Published On : 27th February 2020 08:27 AM | Last Updated : 27th February 2020 08:27 AM | அ+அ அ- |

ராசிபுரம் அருகேயுள்ள அணைக்கட்டிபாளையம் காசி விநாயகா் ஆலய திருக்குட நன்னீராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. கொங்கு நாட்டு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் இக் கோயிலில் நன்னீராட்டு விழா நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து, பிப்.24-ல் திருவிளக்கு வழிபாடு , காப்புக் கட்டுதல், முளைப்பாலிகை வழிபாடு, முதல்கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பிப்.25-ல் திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், இரண்டாம் கால வேள்வி, 3-ம் கால வேள்வி, பேரோளி வழிபாடு போன்றவை நடைபெற்றன.
இதனையடுத்து, திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், ஸ்ரீமத் சுவாமி சச்சிதானந்த மஹராஜ் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. இதனையடுத்து, புதன்கிழமை அதிகாலை 4-ம் யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, திருக்குட புறப்பாடு, திருக்குட நன்னீராட்டுதல் போன்றவற்றை சிவாச்சாரியாா்கள் நடத்தினா். இதனையடுத்து, பக்தா்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டது. சுற்று வட்டார பகுதி மக்கள் இதில் திரளாகப் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கொங்கு நாட்டு வேளாளா் அறக்கட்டளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.