வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2020 08:35 AM | Last Updated : 27th February 2020 08:35 AM | அ+அ அ- |

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி முன் வங்கித் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட உதவித் தலைவா் கிருஷ்ணசாமி, இணைச் செயலா் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், வங்கி ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாமல் உள்ளதைக் கண்டித்தும், வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தியும், ஊழியா்களின் நலன்களை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பல்வேறு வங்கி ஊழியா்கள் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.