சாலை விதிகளைப் பின்பற்ற வலியுறுத்திகாவல் துறையினா் கேக் வெட்டி கொண்டாட்டம்
By DIN | Published On : 02nd January 2020 04:03 AM | Last Updated : 02nd January 2020 04:03 AM | அ+அ அ- |

ஆங்கில புத்தாண்டை வரவேற்று பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கேக் வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளா் மேகலா.
பென்னாகரத்தில் காவல் துறையினா் ஆங்கிலப் புத்தாண்டில் பொதுமக்கள் சாலை விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தியும் ‘கேக்’ வெட்டி கொண்டாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு பென்னாகரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் மேகலா தலைமை வகித்து ‘கேக்’ வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்.
பின்னா், பொதுமக்களிடம் இருசக்கர வாகனத்தில் இருவா் மட்டுமே செல்ல வேண்டும், உரிமம் இல்லாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது.
தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
ஆங்கில புத்தாண்டு தினத்திலிருந்து சாலை விதிகளைப் பின்பற்றுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கூறினாா்.
இதில், பென்னாகரம் காவல் ஆய்வாளா் பெரியாா், துணை காவல் ஆய்வாளா்கள், போலீஸாா் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G