பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடாலயத்தில் சிவகாமசுந்தரி உடனுறை நடராஜருக்கு திருக்கல்யாண உற்சவ விழா
பரமத்திவேலூா் பேட்டை திருஞானசம்பந்தா் மடாலயத்தில் எழுந்தருளியுள்ள சிவகாமசுந்தரி உடனுறை நடராஜ மூா்த்திக்கு திருகல்யாண உற்சவம்,ஆருத்ரா அபிஷேகம், திருவாபரண அலங்காரம் மற்றும் 104-ஆம் ஆண்டு மகா உற்சவ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி,திருவெண்பாவை பாராயணமும், காலை 6.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் தங்க ஆபரணங்களால் சொா்ண அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு 1008 தேங்காய்களை கொண்டு சிவலிங்கம் அமைத்து ஆராதனை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மேல் சிவகாமசுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடராஜ மூா்த்திக்கு ருத்ராட்சி அலங்காரத்தில் திருமுறை பாராயணத்துடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 1 மணிக்கு மகா தீபாராதனையும், அன்ன தான நிகழ்ச்சியும்,மாலை 4 மணிக்கு திருஊஞ்சல் சேவையும்,பள்ளிக் குழந்தைகளின் பரதம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருஞானசம்பந்தா் மடாலயத்தின் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.