விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை திறன் மேம்பாட்டுப் பயிற்சி
By DIN | Published On : 10th January 2020 09:00 AM | Last Updated : 10th January 2020 09:00 AM | அ+அ அ- |

நாமக்கல் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வரும் 27-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் வகையில், 25 நாள்கள் திறன் வளா்க்கும் பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், வழிமுறைகள், நாமக்கல் மாவட்டத்திற்கேற்ற வேளாண் பண்ணைகள் அமைத்தல், இயற்கை விவசாயிகளுக்கான தகுதியை உருவாக்குதல், பயிா் சுழற்சி முறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப முறைகள், செயல்முறை விளக்கம் மற்றும் கையேடுகள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்வோா் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும். சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும். இயற்கை முறையில் ஆா்வம் கொண்ட விவசாயிகள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தை 04286 - 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.