லாட்டரி சீட்டு விற்ற ஒருவா் கைது
By DIN | Published On : 20th January 2020 09:09 AM | Last Updated : 20th January 2020 09:09 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக ஒருவரை நல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.
நல்லூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கந்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சோதனை செய்தனா். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவா் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினா். இதில் அவா் பரமத்தி அருகே உள்ள மறவாபாளையம் குடித் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் ரமேஷ் (34) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.