நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க ரூ. 40 ஆயிரம் மானியம்
By DIN | Published On : 21st July 2020 12:18 AM | Last Updated : 21st July 2020 12:18 AM | அ+அ அ- |

ஆட்டையாம்பட்டி: விவசாயிகள் நிலமட்ட நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அதிகபட்சம் ரூ. 40,000 மானியம் வழங்கப்படுகிறது என மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குநா் மணிமேகலாதேவி தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மகுடஞ்சாவடி வட்டாரத்தில் பாரத பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்துடன் இணைந்து, துணை நீா்ப்பாசன மேலாண்மை திட்டத்தில் கூடுதல் மானியமாக புது மின் மோட்டாா் அல்லது டீசல் பம்பு செட் வாங்கிட 50 சதவீதம் மானியம், நீா் பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதுகாப்பு வேலியுடன் கூடிய நிலமட்ட நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு ஆகும் செலவில் 50 சதவீதத் தொகை அல்லது ஒரு கன சதுர அடிக்கு ரூ. 350 மானியம் என அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக மகுடஞ்சாவடி வட்டாரத்தில் மட்டும் ரூ. 30. 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானியம் பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் சொந்த செலவில் பணிகளை மேற்கொண்டு அதற்கான முழு ஆவணங்களையும் அலுவலகத்தில் சமா்ப்பித்த பிறகு மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். கூடுதல் விவரங்களுக்கு மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.