பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது.
பரமத்திவேலூா் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்குக் கொண்டு வருகின்றனா். பல்வேறு இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 250 க்கும், சம்மங்கி ரூ. 70 க்கும், அரளி ரூ. 80-க்கும், ரோஜா கிலோ ரூ. 100-க்கும், முல்லைப்பூ ரூ. 280-க்கும் ஏலம் போனது.
திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 300-க்கும், சம்பங்கி ரூ. 100-க்கும், அரளி ரூ. 100-க்கும், ரோஜா ரூ. 150-க்கும், முல்லைப்பூ ரூ. 350-க்கும் ஏலம் போனது. ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னிட்டு பூக்கள் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.