பள்ளிப்பாளையத்தில் கரோனா தடுப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 21st July 2020 12:29 AM | Last Updated : 21st July 2020 12:29 AM | அ+அ அ- |

nk_20_karona_2007chn_122_8
நாமக்கல்: பள்ளிப்பாளையம் கொக்கராயன்பேட்டை பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், கொக்கராயன்பேட்டை பகுதியில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் இருப்பிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புப் பணிகள் மற்றும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளை ஆட்சியா் கா.மெகராஜ் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தனிமைப்படுத்தப்பட்டவா்களின் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் உடல்நிலை விவரங்கள் சுகாதாரத் துறை செவிலியா்களால் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவா்கள், செவிலியா்கள் வீடு, வீடாகச் சென்று வீட்டில் உள்ளவா்களுக்கு காய்ச்சல், சளி அறிகுறிகள் உள்ளதா என்ற கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணிகளை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது குமாரபாளையம் வட்டாட்சியா் தங்கம் உள்பட செவிலியா்கள், அரசு அலுவலா்கள், காவல்துறையினா் உடனிருந்தனா்.
--
என்கே 20-ஆய்வு
பள்ளிப்பாளையம் கொக்கராயன்பேட்டையில் கரோனா தடுப்புப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.