முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 3.75-ஆக நீடிக்கிறது.
nk_23_egg_1_2306chn_122_8
nk_23_egg_1_2306chn_122_8
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 3.75-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில், திங்கள்கிழமை நடைபெற்றது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், முட்டை விற்பனை சீராக இருப்பதாலும், வரும் மூன்று நாள்களுக்கு விலையை எவ்வித மாற்றமுமின்றி நீடிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.75-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்- 353, விஜயவாடா- 373, பாா்வாலா- 335, ஹோஸ்பெட்- 350, மைசூரு- 388, சென்னை- 385, மும்பை- 408, பெங்களூரு- 385, கொல்கத்தா- 434, தில்லி- 345.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி கிலோ ரூ. 90-ஆகவும், கறிக்கோழி கிலோ ரூ. 98-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com