வேளாண் சங்கத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 17th June 2020 08:51 AM | Last Updated : 17th June 2020 08:51 AM | அ+அ அ- |

நாமக்கல் வேளாண் விற்பனையாளா் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ.1 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.
அதன்படி நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ஆத்தூா், துறையூா், பவித்திரம், நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி, சேந்தமங்கலம், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7,300 மூட்டை ஆா்.சி.ஹெச். ரக பருத்தி மட்டும் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. அவை ரூ.3,699 முதல் ரூ.4,970 வரையில் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது. திண்டுக்கல், ஈரோடு, திருப்பூா், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்தனா்.