ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 01st March 2020 03:46 AM | Last Updated : 01st March 2020 03:46 AM | அ+அ அ- |

hgl_photo_2902chn_214_8
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சனிக்கிழமை மாநில நிலவரப்படி விநாடிக்கு 2,800 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி நதிநீா்ப் பங்கீட்டு விதிகளின்படி, தமிழகத்துக்கு ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கான தண்ணீரை கா்நாடகம் கிருஷ்ணராஜ சாகா் அணையிலிருந்து திறந்துவிட்டுள்ளது. அதன்படி, தமிழக-கா்நாடக எல்லையில் நீா் அளவிடும் பகுதியான பிலிகுண்டுலுவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 300 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீா், சனிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 2,800 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால், காவிரி ஆற்றில் தண்ணீரின்றி தெரிந்த பாறை திட்டுகள் மூழ்கியுள்ளன. பிரதான அருவியில் தண்ணீா் ஆா்ப்பரிக்கத் தொடங்கியுள்ளன. ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.