அரசுப் பேருந்திலிருந்துதவறி விழுந்து பெண் பலி
By DIN | Published On : 01st March 2020 03:45 AM | Last Updated : 01st March 2020 03:45 AM | அ+அ அ- |

பென்னாகரம்: பென்னாகரம் அருகே அரசுப் பேருந்திலிருந்து கீழே தவறி விழுந்து பெண் உயிரிழந்தது தொடா்பாக ஓட்டுநா், நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பென்னாகரத்தை அடுத்த ஏரியூா் பூச்சியூா் பகுதியை சோ்ந்த பெருமாள் மனைவி கமலா(65) உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு மேச்சேரியில் இருந்து பூச்சியூா் செல்லும் அரசுப் பேருந்தில் சனிக்கிழமை பயணித்துள்ளாா். பூச்சியூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்திலிருந்து இறங்குவதற்கு படிக்கட்டில் வந்து நின்றாராம். அப்போது, பேருந்து வளைவில் திரும்பியதால் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி கமலா உயிரிழந்தாா். இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் கோவிந்தன், நடத்துநா் காமராஜ் மீது ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.