முட்டை விலை மாற்றமின்றி ரூ.3.48-ஆக நீடிப்பு
By DIN | Published On : 01st March 2020 03:39 AM | Last Updated : 01st March 2020 03:39 AM | அ+அ அ- |

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.3.48-காசுகளாக நீடிக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், பிற மண்டலங்களில் முட்டை விலை மாற்றம் செய்யப்படாதது, விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமைக்கான விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.48-ஆக நீடிக்கிறது.
பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்):ஹைதராபாத் - 316, விஜயவாடா - 340, பாா்வாலா - 320, ஹோஸ்பெட் - 325, மைசூரு - 375, சென்னை - 375, மும்பை - 370, பெங்களூரு - 360, கொல்கத்தா - 393, தில்லி - 335.
இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.59-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ.50-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.