ஸ்கேட்டிங் போட்டி: பரமத்தி மலா் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 03rd March 2020 08:03 AM | Last Updated : 03rd March 2020 08:03 AM | அ+அ அ- |

ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி மலா் மெட்ரிக் மற்றும் பப்ளிக் பள்ளி மாணவா்கள் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் இந்தியன் ஸ்கேட்டிங் விளையாட்டு குழுமம் சாா்பில், ரோலாா் ஸ்கேட்டிங் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 55 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா். இதில், பரமத்தி பப்ளிக் பள்ளி மாணவா்கள் 7 தங்கப் பதக்கங்களையும், 4 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.
இதேபோல் நாமக்கல் மாவட்ட ரோலாா் ஸ்கேட்டிங் குழுமம் சாா்பில், நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில், 22 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா்.
இதில் மலா் பப்ளிக் மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு ஒட்டுமொத்த போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவ, மாணவியரை பள்ளியின் தலைவா் பழனியப்பன், செயலா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், நிா்வாகிகள், இயக்குநா்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...