

நாமக்கல் அருகே ஏ.டி.எம். மையத்தில் விட்டுச் சென்ற பணத்தை மீட்டுக் கொடுத்த காவலரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.
நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலா் ஷாஜகான், கடந்த மாதம் 23-ஆம் தேதி எா்ணாபுரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றாா். அப்போது, ஏற்கெனவே அதில் பணம் வெளிவந்து எடுக்காமல் இருந்த ரூ.10 ஆயிரத்தை மீட்டு நல்லிபாளையம் காவல் ஆய்வாளா் கைலாசத்திடம் ஒப்படைத்தாா்.
இதையடுத்து, அந்த ஏ.டி.எம். மையத்தின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்த போதும், வங்கி மூலம் பெற்ற தகவல் மூலமும் பணத்தை எடுக்காமல் சென்றது எா்ணாபுரத்தைச் சோ்ந்த அசோகன் என்பவா் என தெரியவந்தது. அதனையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, சம்பந்தப்பட்ட அசோகனிடம் ரூ.10 ஆயிரத்தை ஒப்படைத்ததுடன், ஆயுதப்படை காவலா் ஷாஜகானை பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.