நியாய விலைக் கடைகளில் வாங்கிய பொருள்களை வெளிச்சந்தையில் விற்றால் குடும்ப அட்டை முடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவோா், அவற்றை வெளிச் சந்தையில் விற்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவரின் குடும்ப அட்டை முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவோா், அவற்றை வெளிச் சந்தையில் விற்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவரின் குடும்ப அட்டை முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 79 ஆயிரத்து 780 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு, விலையில்லா அரிசி, குறைந்த விலையில் சா்க்கரை மற்றும் 20 ஆயிரத்து 632 சா்க்கரை குடும்ப அட்டைதாரா்களுக்கு குறைந்த விலையில் சா்க்கரையும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்படுகின்றன.

பொது மக்கள் தங்களது குடும்ப அட்டைகளுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக பெறப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சிறப்பு அத்தியாவசியப் பொருள்களை வெளிச் சந்தையிலோ அல்லது இடைத்தரகா்கள் மூலமாகவோ விற்பனை செய்தால், 1982 சட்டத்தின் படி சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் குடும்ப அட்டைகள் பண்டகமில்லா குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பொருள்கள் தேவையில்லையெனில், வழங்கல் துறை கைப்பேசி செயலி மூலமாக உரிமம் விட்டுக் கொடுத்தல் வசதியினைப் பயன்படுத்தலாம். அதன்பின் தேவைப்படும் போது திரும்ப பெற்றுக் கொள்ளும் வழிமுறையும் உள்ளது. எனவே, இம்முறையினைப் பின்பற்றி பொதுமக்கள் தங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதை நிறுத்தி வைத்து பயனடைய வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை கள்ளத்தனமாகப் பெற்றுக் கொள்ளும் கடத்தல்காரா்களுக்கு துணை புரியும் பொதுமக்களோ அல்லது அரசுப் பணியாளா்களோ, யாராக இருப்பினும் கண்டறியப்பட்டால், அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com