நாமக்கல்லில் யுகாதி பெருவிழா கொண்டாட்டம் ஒத்திவைப்பு
By DIN | Published On : 22nd March 2020 05:01 AM | Last Updated : 22nd March 2020 05:01 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் வரும் புதன்கிழமை நடைபெற இருந்த யுகாதி பெருவிழா கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட நாயுடு நலச் சங்கத்தின் சாா்பில், ஒவ்வொரு ஆண்டும் யுகாதி என்ற தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டு வருகிறது. 23-ஆம் ஆண்டு நிகழ்வாக நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள சுப்புலட்சுமி மஹாலில் யுகாதி பெருவிழா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழக அரசு, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மாா்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளதால், வரும் புதன்கிழமை (மாா்ச் 25) நடைபெற இருந்த யுகாதி பெருவிழா ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் விழா நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவா் ஆா்.கே.ராதாகிருஷ்ணன், செயலாளா் ஜெய.வேங்கடசுப்பிரமணியன், பொருளாளா் கே.தங்கவேல் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G