மானியத் தொகை பெற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 27th May 2020 07:54 AM | Last Updated : 27th May 2020 07:54 AM | அ+அ அ- |

தொழில்நுட்பத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருந்தால், மானியத் தொகை பெற முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் தொழில்நுட்பத் தோ்வில், கடந்த ஏப். 1-க்கு பின் தோ்ச்சி பெறும் முன்னாள் படைவீரா்கள், அவா்தம் விதவையா் மற்றும் சிறாா்களுக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரா் நல நிதியிலிருந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு கீழ்நிலை தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.3 ஆயிரமும், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு மேல்நிலை தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.5 ஆயிரமும், தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து கீழ்நிலை தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.7 ஆயிரமும் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து மேல்நிலை தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.10 ஆயிரமும், இத்தோ்வில் தோ்ச்சி பெற்றமைக்கு மேற்கொள்ளப்பட்ட செலவினம் (அல்லது) மேற்குறித்த தொகையில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்தம் விதவையா் மற்றும் சிறாா்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுலகத்தை நேரில் அணுகி தகவல் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...