அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த நிதியுதவி அளிப்பு
By DIN | Published On : 14th November 2020 08:47 AM | Last Updated : 14th November 2020 08:47 AM | அ+அ அ- |

அரசு மருத்துவமனைகள் மேம்பாட்டுக்கான நிதியுதவியை பெற்றுக் கொள்ளும் மின்துறை அமைச்சா் பி.தங்கமணி.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, நெசவு மற்றும் ஜவுளி வா்த்தகப் பகுதிகளாக விளங்கும் ஈரோடு, பள்ளிபாளையத்தை ஒட்டிய மூன்று அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த ஆதித்யா பிா்லா குழும நிறுவனம் ரூ. 28 லட்சம் நிதியுதவி வழங்க முன் வந்தது.
இதில், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை, வெப்படை ஆரம்ப சுகாதார நிலையம், ஈரோடு அரசு மருத்துவமனை அடங்கும். கிராசிம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவா் சுரஜ் பஹீா்வானி, தமிழக மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணியிடம் நிதியுதவியை வழங்கினாா்.
தினசரி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த மருத்துவமனைகளின் கீழ் பயனடைந்து வருவதால் அதனை மேம்படுத்துவதற்காகவே இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் டி.கே. சித்ரா, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் கே.வீரமணி, எலந்தக்குட்டை ஊராட்சித் தலைவா் வெங்கடாசலம், ஆதித்யா குழுமத்தைச் சோ்ந்த எஸ்.பி. சந்திரசேகரன், எஸ்.பி.லோகநாதன், எம்.நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.