ஆனங்கூா் செல்வவிநாயகா், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 21st November 2020 01:14 AM | Last Updated : 21st November 2020 01:14 AM | அ+அ அ- |

கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்கள்.
பரமத்திவேலூா் வட்டம், ஆனங்கூா் செல்வவிநாயகா், பகவதி அம்மன், குட்டு முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீா்த்தக் குடங்களுக்கு வந்த பக்தா்கள் செல்வவிநாயகா், பகவதி அம்மன், குட்டு முனியப்பனுக்கு ஊற்றி சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜையும், செல்வவிநாயகா், பகவதி அம்மன், குட்டு முனியப்பன் ஆகிய கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இவ் விழாவில் ஆனங்கூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆனங்கூா் பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா குழுவினா் செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...