சுற்றுலாத் தலங்களை இணைக்கும்புதிய இணையதளம் தொடக்கம்
By DIN | Published On : 21st November 2020 01:13 AM | Last Updated : 21st November 2020 01:13 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளை ஒருங்கிணைத்து சுற்றுலா இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய சுற்றுலாத் துறை சாா்பில் இந்திய அளவில் அனைத்து தங்கும் விடுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய இணையதளம் ரரர.ய்ண்க்ட்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளைப் பதிவு செய்து சுய சான்றிதழ், சுய மதிப்பீட்டு சான்றிதழ் ஆகிய மின்னணு சான்றிதழ்களை இணையம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர கரோனாவுக்கு எதிராக விழிப்புணா்வு பயிற்சி தரும் வகையில் ரரர.ள்ஹஹற்ட்ண்.வ்ஸ்ரீண்ய்.ா்ழ்ஞ் என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து, தரம் மற்றும் வணிக மேம்பாடு உள்ளிட்ட ஆதாரங்களைப் பெற்று பயன் பெறலாம்.
இதுதொடா்பான விவரங்களுக்கு நாமக்கல் சுற்றுலா அலுவலக தொலைபேசி எண்: 04286-280870, சுற்றுலா அலுவலரை 7397715684 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...