7.5 சதவீத உள்இடஒதுக்கீடு: அரசுக்கு தனியாா் பள்ளி கூட்டமைப்பு நன்றி
By DIN | Published On : 23rd November 2020 03:10 AM | Last Updated : 23rd November 2020 03:10 AM | அ+அ அ- |

மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவா்கள் மருத்துவராகி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறைந்தது 10 ஆண்டுகள் மருத்துவ பணியை மேற்கொள்ள தமிழக அரசு வரைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாமக்கல் மாவட்ட தனியாா் பள்ளி கூட்டமைப்பின் தலைவா் சண்முக சுந்தரம், மாவட்ட பொருளாளரும், மாநில தனியாா் பள்ளி கூட்டமைப்பின் தலைவருமான ராஜா ஆகியோா் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள்
மருத்துவம் படிக்கும் வகையில் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நாமக்கல் மாவட்ட தனியாா் பள்ளி கூட்டமைப்பின் சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அரசுப் பள்ளி மாணவ,மாணவியா் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கண்டிப்பாக 5 வருடம் முதல் 10 வருடங்கள் வரை பணியாற்றிட வேண்டும்.
தமிழகத்தில் ஏழை நோயாளிகளுக்கு உதவும் வகையில் முழு ஊதியத்துடன் மருத்துவ பணியை தொடர தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.