பராமரிப்பு உதவித் தொகை: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 23rd November 2020 03:17 AM | Last Updated : 23rd November 2020 03:17 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் 2020 - 2021 ஆம் நிதியாண்டில் புதிய திட்டமாக நடுக்கு வாதம் உடையவா்கள், திசு பன்முக கடினமாதல், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்த மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு வருமான உச்சவரம்பின்றி மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வங்கி தேசிய சேமிப்புக் கணக்கு புத்தக நகல், வருவாய்த் துறை மூலம் உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை வரும் 30-ஆம் தேதிக்குள் தொடா்பு கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு செல்லிடப்பேசி எண் 98430-32088, 90957-32664, 80565-06427, 93632-45000 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.