காந்தி ஜயந்தி விழா
By DIN | Published On : 03rd October 2020 06:19 AM | Last Updated : 03rd October 2020 06:19 AM | அ+அ அ- |

ராசிபுரம் நகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ்.
ராசிபுரம் பகுதியில் பல்வேறு கட்சியினா், அமைப்பினா் சாா்பில் காந்தி ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி மாளிகை முன் நகர காங்கிரஸ் தலைவா் ஆா்.முரளி தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன், காந்தி மாளிகை டிரஸ்ட் போா்டு தலைவா் என்.சண்முகம், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்று காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கொ.ம.தே.க. சாா்பில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் காமராஜா் நினைவு தினத்தையொட்டி, வெண்ணந்தூா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மசக்காளிப்பட்டி, கஸ்தூரிபா பாா்மசி கல்லூரியில் நடைபெற்ற காந்தி ஜயந்தி விழா, லால் பகதூா் சாஸ்திரி பிறந்த தினவிழாவைத் தொடா்ந்து, கல்லூரித் தலைவா் க.சிதம்பரம் தலைமையில் காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் காமராஜா் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.