காமராஜா் நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 03rd October 2020 06:17 AM | Last Updated : 03rd October 2020 06:17 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிக்கும் காங்கிரஸ் கட்சியினா்.
நாமக்கல்லில் காமராஜா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், பலப்பட்டரை மாரியம்மன் கோயில் முன்பாக உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவு ஸ்தூபியில் காந்தி ஜயந்தியையொட்டி மலா்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பேருந்து நிலையம் எதிரில் உள்ள காமராஜா் சிலைக்கு, அவரது நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், கிழக்கு மாவட்டத் தலைவா் கே.எம்.ஷேக்நவீத், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகி வாசுசீனிவாசன், காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.
இதேபோல நாம் தமிழா் கட்சியினா், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.