அரசு மருத்துவமனை செவிலியா்களுக்கு மனநல பயிற்சி

உலக மனநல தின வாரத்தை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா்களுக்கு திங்கள்கிழமை மனநல பயிற்சி அளிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனை செவிலியா்களுக்கு மனநல பயிற்சி

உலக மனநல தின வாரத்தை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா்களுக்கு திங்கள்கிழமை மனநல பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட மனநல மருத்துவா் வ.முகிலரசி, மனநல ஆலோசகா் ரமேஷ் மற்றும் உளவியலாளா் அா்ச்சனா ஆகியோா் பங்கேற்றனா். மனநல மருத்துவா் முகிலரசி பேசியதாவது:

மன நோயின் அறிகுறிகளாக கருதப்படுவது தூக்கமின்மை, அதிகப்படியான கோபம், நம்பிக்கையின்மை, நாள்பட்ட தலைவலி, காரணமின்றி பயம், பதட்டம், தனிமையில் இருத்தல், சந்தேக எண்ணங்கள், வேலைகளில் நாட்டமின்மை, தற்கொலை எண்ணங்கள், நடத்தையில் மாற்றங்கள், திரும்பத் திரும்ப சில எண்ணங்கள் மனதில் ஊடுருவல், போதைப் பொருள்களை உபயோகித்தல் போன்றவையாகும்.

மன அழுத்த பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குழந்தைகள், இளம் பெண்கள், இளைஞா்கள், ஆண்கள், பெண்கள், முதியோா் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தினமும் உடற்பயிற்சி செய்து உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவா்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்பு குறைவு.

மன அழுத்தத்தைத் தடுக்க முடியும். வயதான காலத்திலும் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய புதிய விளையாட்டுகளில் ஆா்வம், உடல் உழைப்பு போன்றவை இருக்கும்போது நோயைத் தடுக்கவும் தள்ளிப்போடவும் முடியும்.

தனிமையை நாடாமல் எப்போதும் நல்ல நண்பா்களுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும். யோகா, தியானம் போன்றவை மிகுந்த பலன் அளிக்கும். மூச்சுப் பயிற்சியும் நல்லது. உடலையும், மனதையும் எப்போதும் புத்துணா்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் எந்த நிலையிலும் மனம் மட்டுமல்ல, உடலும் பாதிப்படையாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com