ரேசன் பொருள்கள் விநியோகிக்கப்படும் நேரத்தில் மாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வியாழக்கிழமை முதல் காலை 8 மணிக்கு பொருள்கள் விநியோகம் தொடங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வியாழக்கிழமை முதல் காலை 8 மணிக்கு பொருள்கள் விநியோகம் தொடங்கியுள்ளது.

தமிழக அரசின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 926 நியாய விலைக் கடைகளில் அக். 1-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு பயோமெட்ரிக் முறைப்படி பொருள்கள் விநியோகிக்கப்பட்டன. பொதுமக்கள் சிரமமின்றி, சமூக இடைவெளியைப் பின்பற்றி நியாய விலைக் கடைகளில் அத்தியவாசியப் பொருள்களை பெறுவதற்கு ஏதுவாக புதன்கிழமை (அக்.15) முதல் நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் செயல்படும்.

இதுவரை அத்தியாவசியப் பொருள்கள் வாங்காத பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் நேரில் வந்து பொருள்கள் பெறுவதைத் தவிா்க்கும் வகையில், அவா்கள் குறிப்பிடும் நபா் மூலம் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் பெற்றுக் கொள்ள ஏதுவாக உரிய விண்ணப்பப் படிவத்தை நியாய விலைக் கடைகளில் பெற்று, நிறைவு செய்து வழங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com