பட்டதாரி ஆசிரியா்கள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 19th October 2020 03:11 AM | Last Updated : 19th October 2020 03:11 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை இணைய வழியில் நடைபெற்றது.
சங்கத்தின் நிறுவனா் மாயவன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். மாநில தலைவா் எஸ்.பக்தவத்சலம், பொதுச்செயலாளா் எஸ்.சேதுசெல்வம், பொருளாளா் எஸ்.ஜெயக்குமாா், மாநில மகளிா் அணி செயலாளா் கே.வாசுகி, சேலம் மாவட்டச் செயலாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் பணியிடை நீக்கம், 17-பி நடவடிக்கைகளை உடனடியாக நீக்க வேண்டும். அவா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயா்வு, பதவி உயா்வு போன்றவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவா் எஸ்.பாலகிருஷ்ணன், செயலாளா் கே. அருள்செல்வன், பொருளாளா் பி. குணசேகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...