

உலக நன்மை வேண்டி, நாமக்கல் ஸ்ரீ சக்கரத்தாழ்வாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு சுதா்சன யாகம் நடைபெற்றது.
நாமக்கல் இராமாபுரம் புதூரில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாா், ஸ்ரீ ஹயக்ரீவா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆஞ்சநேயா், தட்சிணாமூா்த்தி, கருடா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு சன்னதிகளும் உள்ளன. பெளா்ணமி, அமாவாசை, ஏகாதசி, திருவோணம், தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அரசு பொதுத்தோ்வு மற்றும் போட்டித் தோ்வில் பங்கேற்போா் இக்கோயிலில் வழிபாடு செய்து செல்வது வழக்கமாகும். உலக நன்மை வேண்டியும், விரைவில் கரோனா தொற்று நீங்க வேண்டியும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாா் சன்னதி முன்பாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு சுதா்சன யாகம் நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள் பங்கேற்று வேதமந்திரங்களை முழங்கினா். இந்த யாகத்தில் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.