கொல்லிமலையில் ரூ.14.32 கோடியில் சாலைகள்: எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா்

கொல்லிமலையில் ரூ.14.32 கோடி மதிப்பிலான புதிய தாா் சாலை அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் தொடக்கி வைத்தாா்.
nk_14_mla_1409chn_122
nk_14_mla_1409chn_122

நாமக்கல்: கொல்லிமலையில் ரூ.14.32 கோடி மதிப்பிலான புதிய தாா் சாலை அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் தொடக்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் பெரக்கரை நாடு ஊராட்சியில் புதுக்காடு முதல் வடக்காடு, வாழக்காடு வரையில் ரூ.6.32 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது. இதே போல் போல்காடு பகுதியில் ரூ.1.31 கோடியிலும், சித்தூா்நாடு ஊராட்சி நெவரிக்காட்டில் ரூ.1.30 கோடியிலும், சேளூா்நாடு ஊராட்சியில் சோடாங்குழிப்பட்டி முதல் வீரகனூா்பட்டி வரை ரூ.1.25 கோடியிலும் தாா் சாலை அமைக்கப்படுகிறது.

மேலும் தேவனூா்நாடு ஊராட்சியில் மேட்டுவிளாரம் பகுதியில் ரூ.3.78 கோடியில் புதிய சாலை என மொத்தம் ரூ.14 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான பூமி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவா் அ.மாதேஸ்வரி தலைமை வகித்தாா்.

சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் கலந்து கொண்டு சாலைப் பணியை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து அப்பகுதி மக்களிடம் அவா் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சிவப்பிரகாசம், மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு துணைத் தலைவா் யுவராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கொங்கம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்--என்கே -14- எம்எல்ஏகொல்லிமலை ஒன்றியத்தில் ரூ.14.32 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணியை தொடக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com