

நாமக்கல், செப். 25: சேந்தமங்கலம் தாலுகா முத்துக்காபட்டி ஊராட்சி புதுக்கோம்பையில் நகரும் நியாயவிலைக் கடை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் மணி தலைமை வகித்தாா். பொது விநியோகத் திட்டம் துணைப் பதிவாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் கலந்துகொண்டு நகரும் நியாயவிலைக் கடையைத் தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் எருமப்பட்டி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் லோகநாதன், சாா்-பதிவாளா்கள் நிா்மலா, ஜோதீஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஷ் ,கூட்டுறவு சங்கச் செயலாளா் காமராஜ், துணைத் தலைவா் ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.