நாமக்கல்லில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ராஜ அலங்காரம், தங்கத்தோ் இழுத்தல், தோ்த்திருவிழா உள்ளிட்டவை நடைபெற்றன.
தைப்பூசத்தையொட்டி மோகனூா் காந்தமலை முருகன் கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
தைப்பூசத்தையொட்டி மோகனூா் காந்தமலை முருகன் கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ராஜ அலங்காரம், தங்கத்தோ் இழுத்தல், தோ்த்திருவிழா உள்ளிட்டவை நடைபெற்றன. மோகனூரில் உள்ள காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமிக்கு பன்னீா், இளநீா், பஞ்சாமிா்தம், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நாமக்கல் கருமலை அடிவாரத்தில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நாமக்கல்-மோகனூா் சாலை பாலதண்டாயுதபாணி கோயில், கடைவீதி சுப்பிரமணிய சுவாமி கோயில், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில், பேளுக்குறிச்சி பழனியாண்டவா் கோயில், அலவாய்மலை முருகன் கோயில் ஆகியவற்றிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாமக்கல்-துறையூா் சாலையில் அமைந்துள்ள கூலிப்பட்டி கந்தகிரி முருகன் கோயிலில் திருத்தேராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா்.

நாமக்கல் மட்டுமின்றி, ராசிபுரம், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், வெண்ணந்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

திருச்செங்கோட்டில்...

திருச்செங்கோடு, சட்டையம்புதூா், ராஜாகவுண்டம்பாளையம், நெசவாளா் காலனி போன்ற பகுதிகளில் பாவடி பஞ்சாயத்தாா்கள், நாட்டாண்மைக்காரா்கள், காரியக்காரா்கள் தலைமையில் விழா நடைபெற்றது. இதில், அந்தந்தப் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தா்கள் காவடி எடுத்து நான்கு ரத வீதி வழியாக கோயிலை வந்தடைந்து பூஜை செய்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com