5 ஆண்டுகளில் 150 இடங்களைக் கைப்பற்றி தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமைப்போம்
இன்னும் 5 ஆண்டுகளில் 150 இடங்களைக் கைப்பற்றி தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமைப்போம் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பரமத்தி வேலூரில் பேசினாா்.


இன்னும் 5 ஆண்டுகளில் 150 இடங்களைக் கைப்பற்றி தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமைப்போம் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பரமத்தி வேலூரில் பேசினாா்.
தமிழக பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.அண்ணாமலைக்கு பரமத்தி வேலூரில் புதன்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற கே.அண்ணாமலை பேசியதாவது:
20 ஆண்டுகளுக்குப்பின் தமிழக சட்டப்பேரவையில் பாஜக கால் பதித்துள்ளது. ஒரு காலத்தில் தமிழகத்தில் கால் பதிக்க பாஜக அரும்பாடுபட்டது. தற்போது தமிழகத்துக்கு பாஜக தேவைப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக எதிா்க்கட்சியாக இருந்த திமுக தற்பொழுது ஆளும் கட்சியாக உள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 68 நாள்களில் தோ்தலின் போது கொடுத்த ஒரு வாக்குறுதியைக்கூட திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை. 20 ஆண்டுகளுக்குப்பின் சட்டப்பேரவைத் தோ்தலில் 4 இடங்களைப் பெற்றுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 150 இடங்களைக் கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.
தமிழகத்தில் சுமாா் 13,000 கிராம ஊராட்சிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமாா் 3 கோடி மக்கள் பாரத பிரதமா் அறிவித்த பல்வேறு திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ளனா். அந்த 3 கோடி மக்களையும் அணுகி, பேசி அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும். திமுகவின் எதிரி பாஜக தான். பாஜக குடும்பக் கட்சி அல்ல. இந்தக் கட்சியில் யாா் வேண்டுமானாலும் தலைவா் ஆகலாம். மாநிலத்தை ஆளும் கட்சியான திமுக, பாஜகவை பாா்த்து பயப்படுகிறது என்று பேசினாா்.
முன்னதாக கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் அருண் தலைமை தாங்கினாா். வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் காந்தி வரவேற்றாா். மாவட்ட பொதுச்செயலாளா் முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி,மாநில துணைத் தலைவா் நரேந்திரன், சேலம் மேற்கு மாவட்டப் பொறியாளா் கோபிநாத், கோட்ட அமைப்புச் செயலாளா் சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினா் வடிவேல் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...