இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிவன் கோயில்களில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு

ஆடி மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:31 pm

DIN

ஆடி மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் உள்ளிட்ட சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு ஆடி மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

வேலூா் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகமும், வளையல் காப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.