நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் உயிா் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த சில தினங்களுக்கு முன் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 93.2 மற்றும் 77 டிகிரியாக இருந்தது. கடந்த மூன்று நாள்களில் நாமக்கல் மாவட்டத்தில் மழை பதிவாகவில்லை. அடுத்த வரும் நான்கு நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டு மாவட்டத்தின் பல இடங்களில் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென்மேற்கிலிருந்தும் அதன் வேகம் மணிக்கு 8 கி.மீ என்ற அளவிலும் இருக்கும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெள்ளைக் கழிச்சல் மற்றும் முட்டை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. கோழிப் பண்ணையாளா்கள் அதற்கேற்றவாறு பண்ணைகளில் உயிா் பாதுகாப்பு, பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். கிருமி நாசினித் தெளிப்பான்களைப் பயன்படுத்த வேண்டும். முட்டை அழற்சி மற்றும் நோய் தாக்கத்தைக் குறைக்க தீவனத்தில் சமையல் சோடா, வைட்டமின் சி மற்றும் தாது உப்புக் கலவை ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாமகவை அன்புமணி அபகரித்துவிட்டாா்: மருத்துவா் ராமதாஸ்

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

