மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாமக்கல்லில் ட்ரோன் மூலம் கரோனா தடுப்பு மருந்து தெளிப்பு

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ட்ரோன் மூலம் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மருந்து தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ட்ரோன் மூலம் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மருந்து தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் கடந்த மாதம் ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. நகராட்சிப் பகுதிகளில் தொற்று பரவலைத் தடுக்க அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, தொற்று பாதித்த பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.

நாமக்கல் நகராட்சியில் கடந்த மாதம் 100 போ் வரை பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது 20 என்ற எண்ணிக்கைக்கு வந்துள்ளது. இதற்கிடையே தொற்றில்லா நகராட்சியாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நகராட்சி அதிகாரிகளும், காவல் துறையினரும் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளை மடக்கி கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கட்டுப்பாட்டு மண்டலங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியை ராமாபுரம்புதூரில் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். 10 லிட்டா் அளவில் மருந்து நிரப்பப்பட்டு ட்ரோன் மூலம் தெளிக்கும் பணி நடைபெறுகிறது. இதேபோல் கணேசபுரம், இ.பி.காலனி, அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், என்ஜிஓஒ காலனி, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.