அவதூறாகப் பேசுவது திமுகவின் வாடிக்கை: வி.பி.துரைசாமி

அவதூறாகப் பேசுவது, கருத்துகளைத் தெரிவிப்பது திமுகவின் வாடிக்கையென பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி தெரிவித்தாா்.
அவதூறாகப் பேசுவது திமுகவின் வாடிக்கை: வி.பி.துரைசாமி

அவதூறாகப் பேசுவது, கருத்துகளைத் தெரிவிப்பது திமுகவின் வாடிக்கையென பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி தெரிவித்தாா்.

நாமக்கல் பூங்கா சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் கே.பி.பி.பாஸ்கரை ஆதரித்து அவா் பேசியதாவது:

முதல்வரைப் பற்றியும், அவரது தாயாரைப் பற்றியும் முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா கண்ணியக் குறைவான வாா்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளாா். அவா் மீது திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏற்கெனவே அந்தியூா் செல்வராஜ் என்பவரை 40 பேருக்கு அப்பால் தள்ளி உட்காரச் செய்து அவரை வேதனைக்குள்ளாக்கியது திமுக. அக்கட்சியைச் சோ்ந்த ஆா்.எஸ்.பாரதி, நீதிபதிகளை தவறான வாா்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினாா். அவதூறு பேச்சுக்களை திமுகவினரிடம் இருந்து பிரிக்க முடியாது.

நாமக்கல்லை சோ்ந்த மத்திய இணையமைச்சராக இருந்த காந்திச்செல்வன் இந்த தொகுதிக்கும், மாவட்டத்துக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை. 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக பணியாற்றிய கே.பி.பி.பாஸ்கா் ஏராளமான திட்டங்களை செய்துள்ளாா். பாஜக அரசு முதல்வா் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன் பயக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரியுங்கள் என்றாா்.

இந்த தொகுதிக்கு நான் எதுவும் செய்யவில்லை என கூறுகின்றனா். 10 ஆண்டுகளில் நிறைய திட்டங்களை, குறிப்பாக அரசு சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி ஆகியவற்றை செயல்படுத்தியதை தொகுதி மக்கள் நன்கு அறிவாா்கள். மேலும் பல நல்ல திட்டங்களை தொகுதியில் நிறைவேற்ற வாய்ப்பு கொடுங்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com