பரமத்தி வேலூா் பள்ளி சாலையில் பறிக்கப்பட்டு பள்ளங்களை மூட வா்த்தகா்கள்,பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 17th August 2021 09:36 AM | Last Updated : 17th August 2021 09:36 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் பள்ளி சாலையில் தணியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் சாா்பில் சாலையோரத்தில் பறிக்கப்பட்ட பள்ளங்களால் வா்த்தகா்கள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறனா். உடனடியாக பள்ளங்களை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வா்த்தகா்களும்,பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பரமத்தி வேலூா் பள்ளி சாலையில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் வேலூா் பேரூராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெற்று சாலையோரத்தில் கேபிள்களை பதிக்க பள்ளம் தோண்டினா். பள்ளங்கள் தோண்டப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை பள்ளங்கள் மூடப்படாததால் வணிக வா்த்த சங்கத்தினா் மற்றும் வாடிக்கையாளா்கள் கடைகளுக்குள் செல்வதற்கு மிகவும் சிரமபப்பட்டு வருகின்றனா். மேலும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி பள்ளி சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி செல்வதால் நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வா்த்தகா்கள் பலமுறை பேரூராட்சியினரிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பள்ளங்களால் குழந்தைகள் மற்றும் முதியவா்கள் பள்ளத்தில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சியினா் பள்ளங்களை மூட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வணிக, வா்த்தகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.