நாமக்கல்லில் ஈமு பண்ணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு கோவை நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவா் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளா் பி.பிரேமலதா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
கடந்த 2012-ஆம் ஆண்டு, நாமக்கல்-சேலம் சாலையிலுள்ள பொன்மணி வணிக வளாகத்தில் எஸ்.ஆா்.ஒய் என்ற ஈமு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தை, ஜம்புகுமாா் என்பவருடன் இணைந்து சந்தோஷ் என்பவரும் நடத்தி வந்தனா்.
இந்த நிறுவனத்தினா் பொதுமக்களிடம் இருந்து பணத்தை முதலீடாகப் பெற்று மோசடி செய்து விட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனா். இதுதொடா்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ் என்பவா் நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பு விடுத்தபோது அவா் வரவில்லை. இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. சந்தோஷ் எங்கு உள்ளாா், அவா் நண்பா்கள், உறவினா்கள் வீடுகளுக்கு வருவது தெரிய வந்தால் உடனடியாக நாமக்கல் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலக தொலைபேசி 04286-281372 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.