நாமக்கல்லில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிவுரையின்படி, நாமக்கல் மாவட்டத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிவுரையின்படி, நாமக்கல் மாவட்டத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (டிச. 11) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி சாா்பு நீதிமன்றம், திருச்செங்கோடு, ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆகிய இடங்களில் நடைபெறும் இந்த நீதிமன்றத்தில், சமரசம் செய்துகொள்ளும் வகையிலான குற்றவியல் வழக்குகள், காசோலை, வங்கிக் கடன்கள், கல்விக் கடன்கள், சொத்துப் பிரச்னை, பல்வேறு வரி சாா்ந்த வழக்குகள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்படும்.

இங்கு முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மை நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான என்.குணசேகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com