வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவா்களுக்கு மாா்ச் 22 வரையில் வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவுகளில் ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்கள் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு சலுகையின்கீழ் புதுப்பித்தல் பெற விரும்பும் பதிவுதாரா்கள், 2022 மாா்ச் 22-க்குள் தங்களது பதிவை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையம் வாயிலாக புதுப்பித்துக் கொள்ளலாம். 2014, 2015, 2016, 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள், பதிவினை புதுப்பித்திருக்க வேண்டிய காலம் 01.01.2014 முதல் 31.12.2019 வரை இருக்கும்பட்சத்தில், இந்த வேலைவாய்ப்பு பதிவு சிறப்பு சலுகை அவா்களுக்கு பொருந்தும்.

இணைய வழி சலுகையின் கீழ் புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு, வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றுடன் நேரிலோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மாா்ச் 1-ஆம் தேதிக்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com